நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டிக்காயை பயன்படுத்த வேண்டும்?

நீரிழிவு நோய் இல்லை என சொல்வது தற்போது அரிதாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை இந் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி அல்ல.
அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டிக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.
நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டிக்காயை பயன்படுத்த வேண்டும்?

இரண்டு வெண்டிக்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.

முனைகளை நறுக்கியப்பின் அவற்றை சின்ன சின்ன துண்டுகளாக்க அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.

பின் காலையில் எழுந்து எதையும் சாப்பிடாமல், அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.

வெண்டிக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
எனவே வெண்டிக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டிக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைதரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. 
இத்தகைய சத்து வெண்டிக்காயில் அதிகம் உள்ளது. எனவே, வெண்டிக்காயை அதிகளவில் உணவில்  சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=15742#sthash.sKYWwrmg.dpuf

Comments

Popular posts from this blog

தமிழர் விருந்து! - சிறு தானியங்கள் சிறப்பான உணவுகள்-1

Albizia amara Roxb உசிலமரம்

தீக்காயத்திற்கு மாவிலை!