டூத்பேஸ்ட் விளம்பரக்காரங்க பண்றது ரொம்ப ஓவர்

நமது வாயை ஆரோக்கியத்துடன் பாதுகாப்பது அவசியம் தான். ஆனால், அதற்காக இந்த டூத்பேஸ்ட் விளம்பரக்காரங்க பண்றது ரொம்ப ஓவர். உதாரணத்திற்கு Colgate டூத்பேஸ்ட் எடுத்துக்குங்க...இதுல எத்தனை வகைகள் இருக்குன்னு பாருங்க...
1) Colgate Active Salt,
2) Colgate Sensitive Pro Relief,
3) Colgate Maximum Cavity Protection,
4) Colgate Plax
5) Colgate Total
6) Colgate Total Advanced
7) Colgate Visible White
8) Colgate Sparkling White
9) Colgate Max Fresh
10)Colgate Triple Action
11)Colgate 2in1
எனக்கு தெரிந்து நமது உடம்பில் உள்ள ஒரு உறுப்பை பாதுகாக்க ஒரே கம்பெனி 11 வகையான தயாரிப்புகளை கொடுப்பது Colgate ஆக தான் இருக்கும்.
பொதுவா, நமக்கு முக்கியமா ரெண்டு பிரச்சனை தான் இருக்க முடியும்...ஒன்னு, பல்லு வெள்ளையா இருக்கனும். ரெண்டாவது, மத்தவங்க கிட்ட பேசும்போது ஸ்மெல் வரக்கூடாது.
ஆனா பாருங்க...பல்லு வெள்ளையா இருக்க ஒரு பேஸ்ட், துர்நாற்றம் போக ஒரு பேஸ்ட், ஈறுகளை பாதுகாக்க ஒரு பேஸ்ட், பல் கூச்சத்தை போக்க ஒரு பேஸ்ட், பற்சிதவை தடுக்க ஒரு பேஸ்ட்....இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு பேஸ்ட் இருக்கு.
சரி, இப்ப எனக்கு ஈறுகளை பாதுகாக்கனும். அதுக்கு தேவையான Colgate Active Salt பயன்படுத்துறேன்னு வெச்சிக்கங்க...ஆனா அதே சமையம் எனக்கு பற்களும் வெள்ளையா இருக்கனும்...அதுக்கு நான் Colgate Visible Whiteம் பயன்படுத்துறேன்...அதாவது காலையில் ஒன்று சாயந்திரம் ஒன்று.
அப்போ, துர்நாற்றத்தை போக்க Colgate Max Fresh பயன்படுத்தியாகனுமே...அதை எந்த நேரத்தில் பயன்படுத்துவது...?? சரி, Colgate Active Saltம் துர்நாற்றத்தை போக்கும் என்றால், பிறகு தனியாக Colgate Max Fresh என்ற தயாரிப்பு எதற்கு..?? Colgate எதை தயாரித்து சந்தைக்கு கொண்டு வந்தாலும், அதை நாம் வாங்கி பயன்படுத்தியே ஆக வேண்டுமா...?
ஒருவேளை, ஒரு நபருக்கு அனைத்து வாய் பிரச்சனைகளும் இருந்தால், மேலே சொன்ன 11 தயாரிப்புகளையும் தனி தனியாக வாங்கி பயன்படுத்த வேண்டுமா...?? சிந்தியுங்கள் நண்பர்களே....!!!

Comments

Popular posts from this blog

தமிழர் விருந்து! - சிறு தானியங்கள் சிறப்பான உணவுகள்-1

Albizia amara Roxb உசிலமரம்

தீக்காயத்திற்கு மாவிலை!