ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்..

நறுந்தாளி நன்முருங்கை தூதுளை பசலை
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழிஎன
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் 
பின் வாங்கிக் கேள்
இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
"கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை,இன்றைய கலாச்சார சீரழிவு,மற்றும் fast food எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.ஆண்மைக்குறைவினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவகாரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது
.
ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிமுறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர்.இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள பாடலில் உள்ளது.
நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும்
நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை
அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை
இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே.!

Comments

Popular posts from this blog

தமிழர் விருந்து! - சிறு தானியங்கள் சிறப்பான உணவுகள்-1

Albizia amara Roxb உசிலமரம்

தீக்காயத்திற்கு மாவிலை!