Posts

Showing posts from July, 2014

வீட்டு வைத்தியம் ...!

லும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும். நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும். குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும். உடல் வலிமை பெற : அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும். அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும். மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும். இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும். சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும். படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும். நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நேரம் குணமாகும். கொத்தமல்ல...

புளியாரைக் கீரையின் மருத்துவ குணங்கள்:-

Image
புளியாரைக் கீரையின் மருத்துவ குணங்கள்:- அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும். உடலில் புது ரத்தம் ஊற வைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது. தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் அதிசயமான பலன்களைப் பெறலாம். குளிர்ச்சியான உடல் தன்மை கொண்டவர்கள் இந்தக்  கீரையைத் தொடர்ந்து சாப்பிடக்கூடாது. புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்கள் 1. புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். 2. புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும். 3. புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும். 4. புளியாரைக் கீரையுடன் வெந...

முருங்கைக் கீரையின் பயன்கள்!

Image
• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். • முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. • இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து. • முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோ...

"உணவையே மருந்தா தர்றோம்..."

Image
'உணவே மருந்து’ என்பதை உலகுக்குச் சொன்னது தமிழகம்தான். ஆனால், இன்றைக்கு நுகர்வுவெறி காரணமாக... பாரம்பரியத்துக்கு பால் ஊற்றியதன் விளைவால், ஆரோக்கியத்துக்கு பாடை கட்டிக் கொண்டிருக்கிறோம், இதே தமிழகத்தில்! பல்வேறு நாடுகளும் நம் சிறுதானிய உணவில் இருக்கும் அற்புதங்களை உணரத் தொடங்கி இருக்கும் நிலையில்... நாம் இன்னமும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் நோய்களை வாங்கக் காத்திருக்கிறோம். இந்நிலை மாறவேண்டும் என நினைக்கும் இயற்கை ஆர்வலர்கள், இயற்கை விளைபொருட்கள், சிறுதான ிய உணவுகள் எனப் பாரம்பரியப் பழக்கங்களை இளைய தலைமுறையிடம் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.ந்த வரிசையில், சென்னையில், மூலிகைச் சாறு மற்றும் உணவுகள் மூலமாக ஆரோக் கியம் பரப்பி வருகிறார்கள், 'தாய்வழி இயற்கை உணவக’த்தைச் சேர்ந்த நண்பர்கள். சென்னை, சைதாபேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஜீனிஸ் சாலை.... சிறப்பு கட்டுரையை முழுமையாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/1oAYFKX

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

Image
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வா...

வீட்டு வைத்தியம் ...!

எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும். நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும். குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும். உடல் வலிமை பெற : அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும். அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும். மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும். இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும். சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும். படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும். நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நேரம் குணமாகும். கொத்தமல்...

மனித உடல்— ஒரு மணி நேரத்தில்

Image
ஒரு மணி நேரத்தில் மனித உடலில் சராசரியாக 100 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன. ஓர் ஆண்டில் 8,67,00 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன. மனித உடலின் எடையில் ஆக்ஸிஜன் 65% உள்ளது. நமது சிறுநீரகத்தில் லட்சக்கண்க்கான வடிகட்டிகள் உள்ளன. இவை தினமும் 190 லிட்டர் ரத்த்த்தை வடிகட்டுகின்றன. ரத்தத்திலுள்ள கொழுப்பை ‘லெசித்தின்’ எனும் அமிலம் தான் கரக்கிறது. இரைப்பையின் எடை 4 அவுன்ஸ். கல்லிரல் எடை 50 முதல் 60 அவுன்ஸ் வரை உள்ளது. மனித உடலில் பல்வேறு வேலைகளுக்கு பயன்படும் சுரப்பிகள் பலவகை உண்டு. அதில் பிட்யூட்ரிசரப்பி, பினியல்சுரப்பி,தைராய்டு சுரப்பி,தைமஸ்சுரப்பி,கணையச்சுரப்பி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைகளை செய்கின்றன. இந்த சுரப்பிகள் மனித உடலில் எங்கெங்கு உள்ளன என்பதை பார்ப்போம். 1. பிட்யூட்ரிசரப்பி-மூளையில் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. 2. பினியல்சுரப்பி- மூளையில் மேற்பகுதியில் அமைந்துள்ளது. 3. தைராய்டு சுரப்பி-கழுத்தில் உள்ளது. 4. தைமஸ்சுரப்பி-கழுத்தின் கீழ்பகுதியில் உள்ளது. 5. கணையச் சுரப்பி-வயிற்றின் அருகில் அமைந்துள்ளது. 6. அட்ரினல் சுரப்பி-சிறுநீரகத்தின்...

இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மரமஞ்சள்..

Image
மரமஞ்சள் மர இனத்தைச் சேர்ந்ததாகும். இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. தமிழகம் எங்கும் காடுகளில் காணப்படுகின்றது. வேறு பெயர்கள்: காலேயகம், தாறுவி வகைகள்: தாளுகரித்ரா, கர்ப்பூரகரித்தா ஆங்கிலத்தில்: Coscinium Fenestratum இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். மர மஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர குணமாகும். மரமஞ்சளின் விழுதை நெல்லிக்காயளவு அரைத்து 100 மில்லியளவு பசுவின் கோமியத்துடன் கலந்து காலையில் குடித்து வர சிலேத்தும நோய்கள் குணமாகும். மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும். மரமஞ்ச...

கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி

Image
கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப் படிகளில் ஏறினாலோ மூச்சிரைக்கும். அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழப்பதுதான் மிச்சம். பொதுவாக ஒருவருடைய எடை அவருடைய நடுத்தர வயதில்தான் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இன்று சிறு பிள்ளைகள் கூட குண்டாகி அவதிக்குள்ளாகின்றனர். இதற ்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கியக் காரணமாகிறது. உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்கி விடுவதால் உடல் பெருத்துவிடுகிறது. உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடப்பார்கள். அது தவறு. மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலும் உடல் எடை குறையாது. உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும். அதற்கு கொடம்புளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கொடம்புளி இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடம்புளியைப் பயன்படுத்துகிறார்கள். கெ...

கை, கால் எரிச்சலா?

Image
கை, கால் எரிச்சலா? மருதோன்றி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. மருதோன்றியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள். இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர். Tamil - Maruthonri English - Henna Sanskrit - Rakta garba Malayalam - Mailanchi Telugu - Goranti Hindi - Mehandhi Botanical Name - Lawsonia inermis கை, கால் எரிச்சல் கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல...

மாவிலங்கம்

Image
முகவாத நோய்க்கு அருமருந்தான மாவிலங்கம்! இந்தியாவினைச் சார்ந்த இலையுதிர் மரம் மாவிலங்கமாகும். இது ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக காணப்படும். இந்த மரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். மாவிலங்கத்தின் இலைகளும், பட்டையும் மருத்துவ பயன் கொண்டவை. கி.மு 8-ம் நூற்றாண்டிலேயே ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மாவிலங்கத்தின் மருத்துவ பயன்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 1100-ம் ஆண்டு முதல் சிறுநீரகக் கல் போக்க இந்திய மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்பட ுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் வருனால், ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன. அலர்ஜிக்கு மருந்து மாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன....

Albizia amara Roxb உசிலமரம்

Image
உசிலமரம் தாவரவியல் பெயர் : Albizia amara Roxb சமமான இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளையும், பூக்களின் கற்றையான மகரந்தத் தாள்களையும் தட்டையான காய்களையும் வட்டமான விதைகளையும் மிகவும் உறுதியான கட்டைகளையும் உடைய மரம். இலை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. 1. இலைப் பொடியை எண்ணெய்க் குளியலின் பொது சிகைக்காய்க்குப் பதிலாகப் பயன்படுத்த உடல் குளிர்ச்சி பெறும். 2. உசிலைப் பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மி.லி. யாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 1,2 தேக்கரண்டி ஒரு நாளைக்கு மூன்று வேலையாகக் கொடுக்க குழந்தைகளுக்கு வரும் அள்ளு மாந்தம், சுழிக் கணை ஆகியவை குணமாகும்.

தமிழர் விருந்து! - சிறு தானியங்கள் சிறப்பான உணவுகள்-1

Image
********************************************************************* ''அன்னம் எப்படியோ, எண்ணம் அப்படியே! உணவின் தூய்மை உணர்ந்து, வாழ்வை எளிமையாக்கும் உன்னதப் பாதை, சிறுதானிய உணவு முறையில் பொதிந்துள்ளது'' - நம்மாழ்வார். நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது. நம் மரபு முறை உணவுகள், வெறும் பசி போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அரு மருந்தாகவும் பயன்படுகின்றன. ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை, இன்று வசதியானவர்களின் உணவாக, வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாக மாறிவருகின்றன. நாளுக்கு நாள் அவற்றின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் இருப்பதால்தான், இந்த நிலை. விவசாயிகள், பணப் பயிரை விவசாயம் செய்வதால், நமது பாரம்பரிய உணவுகள் அழிந்துவருகின்றன. ஆதித் தமிழர்களின் ஆரோக்கியமே, நமது சிறுதானிய உணவில்தான் அடங்கி இருந்தது சிறுதானிய உணவு வகைகள் தினை அல்வா ******************** தேவையானவை: தினை அரிசி மாவு - 200 கிராம், வெல்லம் - 200 க...

டூத்பேஸ்ட் விளம்பரக்காரங்க பண்றது ரொம்ப ஓவர்

நமது வாயை ஆரோக்கியத்துடன் பாதுகாப்பது அவசியம் தான். ஆனால், அதற்காக இந்த டூத்பேஸ்ட் விளம்பரக்காரங்க பண்றது ரொம்ப ஓவர். உதாரணத்திற்கு Colgate டூத்பேஸ்ட் எடுத்துக்குங்க...இதுல எத்தனை வகைகள் இருக்குன்னு பாருங்க... 1) Colgate Active Salt, 2) Colgate Sensitive Pro Relief, 3) Colgate Maximum Cavity Protection, 4) Colgate Plax 5) Colgate Total 6) Colgate Total Advanced 7) Colgate Visible White 8) Colgate Sparkling White 9) Colgate Max Fresh 10)Colgate Triple Action 11)Colgate 2in1 எனக்கு தெரிந்து நமது உடம்பில் உள்ள ஒரு உறுப்பை பாதுகாக்க ஒரே கம்பெனி 11 வகையான தயாரிப்புகளை கொடுப்பது Colgate ஆக தான் இருக்கும். பொதுவா, நமக்கு முக்கியமா ரெண்டு பிரச்சனை தான் இருக்க முடியும்...ஒன்னு, பல்லு வெள்ளையா இருக்கனும். ரெண்டாவது, மத்தவங்க கிட்ட பேசும்போது ஸ்மெல் வரக்கூடாது. ஆனா பாருங்க...பல்லு வெள்ளையா இருக்க ஒரு பேஸ்ட், துர்நாற்றம் போக ஒரு பேஸ்ட், ஈறுகளை பாதுகாக்க ஒரு பேஸ்ட், பல் கூச்சத்தை போக்க ஒரு பேஸ்ட், பற்சிதவை தடுக்க ஒரு பேஸ்ட்....இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு பேஸ்ட் இருக்கு. சரி, இப்ப எனக்கு...

எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை!

Image
எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை! பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாகக் காண்போம். இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து க...

தீக்காயத்திற்கு மாவிலை!

Image
மாமரம் சைவ சமயத்தில் ஒரு சில சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர். கிருமிநாசினியான மாவிலை கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள். கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்ப...

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

Image
நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே! அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்த ுமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும் ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம் ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம் நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம் முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம் வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல் அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம் வில்வம் : பித்தம், ஆஸ்...

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்

Image
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம்,  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும், தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" தா...

பித்தம் குறையும்

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். * இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும். * பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். * எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும். * ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். * பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும். * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம். * அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும். * பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும். * கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும். * நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும். * எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தா...

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

Image
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:- கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறு நீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். கண் இமைகளில் வலி.. என்ன வியாதி? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி? அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்த...