#Prabhakaran அவர் எங்கே


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் என்ற உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெற்றிக்குமரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக பழ நெடுமாறன் கூறிய தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுத்துள்ளார்




.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாங்கள் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட போரில் அவர் கொல்லப்பட்டார். தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள். இது எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்தார்.


என் தம்பி சின்னவன் பால சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிச்சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக நின்று சண்டையிட்டவர் எங்கள் அண்ணன் பிரபாகரன். தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிராபகன். போர் முடிந்து பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு, பிரபாகரன் 15 ஆண்டுகள் பத்திரமாக ஓரிடத்தில் பதுங்கி இருப்பார்... எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நினைக்கிறீர்களா? சொல்லிவிட்டு வருவபர் அல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன்... வந்துவிட்டு சொல்வார். அது தான் அவருக்கு பழக்கம் அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு கற்பித்த தலைவர் பிரபாகரன். அதனால் தேவையின்றி குழப்பிக்கொண்டிருக்கவேண்டியதல்ல. பிரபாகரன் ஒரு நாள் மக்களுக்கு முன் தோன்றுவார் என்று பழநெடுமாறன் கூறுகிறார். தோன்றும்போது பேசுவோம். அன்பழகன் சொல்வது போல் எங்கள் தலைவர் பிரபாகரன் ஒருநாள் நேரில் வந்துவிட்டால் வந்ததில் இருந்து பேசுவோம்' என்றார

Read More  

Comments