#Prabhakaran அவர் எங்கே
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் என்ற உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெற்றிக்குமரன் மறுப்பு தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக பழ நெடுமாறன் கூறிய தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுத்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாங்கள் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட போரில் அவர் கொல்லப்பட்டார். தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள். இது எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்தார். என் தம்பி சின்னவன் பால சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்...