Posts

Showing posts from October, 2014

தீபாவளி மருந்து செய்வது எப்படி?

மறந்துபோன தீபாவளி மருந்து........!!!! தீபாவளி மருந்து செய்வது எப்படி? என் சிறுவயதில் என் பாட்டி தீபாவளி அன்று பலகாரங்கள் செய்யும் போதே கூடவே தீபாவளி மருந்து என்று ஒன்றை செய்தது நினைவில் வருகிறது. இந்த பாரம்பரிய மருந்து இன்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை பற்றி கேள்விப்பட்டிருக்க கூட வாய்ப்பு இல்லை...... உடலுக்கு மிகவும் சிறந்த இந்த மருந்தை இன்று நினைது பார்க்கும் போது, தமிழர்களின் உன்னதமான சித்தமருத்துவம் எவ்வளவு சிறந்தது என்று வியப்பை தருகிறது...... தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி மருந்து அல்லது லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த லேகியம் ரெடி பண்ண நேரமில்லாதவ்ர்கள் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்ப...