Posts
Showing posts from June, 2014
தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்
- Get link
- X
- Other Apps
தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள் கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போ க்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும். * பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும். * ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும். * கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள்...
கருங்காலி வேர்!
- Get link
- X
- Other Apps
இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் கருங்காலி வேர்! மரங்கள் மனிதனுக்கு ஆதாரமானவையாகத் திகழ்கின்றன. மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். ஆனால் இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான். மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று. பொதுவாக கருங்காலி மரம் இந்தியா முழுவதிலும், மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் குருதிக்குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும். கருங்காலி வேர்:1 * கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும். பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட...
தேனின் பயனும்
- Get link
- X
- Other Apps
தேனின் பயனும் வயிற்று நோயும், தேனின் பயனும் சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம். * கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகள ும் குணமாகும். * வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும். * வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும். * இஞ்சி...
சைனஸ் தொல்லைக்கு வேப்ப எண்ணெய்!
- Get link
- X
- Other Apps
வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா? * வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது. * வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும். * வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம். * 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும். * வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசை...
பசியைத் தூண்டும் பரங்கிக்காய்
- Get link
- X
- Other Apps
பசியைத் தூண்டும் பரங்கிக்காய் பரங்கிக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறாம். பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போக்கும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும். ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது ஜீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும். பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பல மற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட வேண்...
ஜாதிக்காய்!
- Get link
- X
- Other Apps
ஆண்மைக் குறைவைப் போக்கும் ஜாதிக்காய்! பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்: ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா - டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது. முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்பட...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை!
- Get link
- X
- Other Apps
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும். பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகி...
சீத்தாப்பழம்!
- Get link
- X
- Other Apps
நினைவாற்றலை அதிகரிக்கும் சீத்தாப்பழம்! பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது. பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்: சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது. முகப் பருக்கள் குணமடையும்: சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பி...
திருநீர்பச்சை
- Get link
- X
- Other Apps
ரத்த வாந்தியை கட்டுப்படுத்தும் திருநீர்பச்சை இந்தியாவின் வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வளரும் திருநீர்பச்சை, சாலை ஓரங்களிலும் வீணாக இருக்கும் இடங்களிலும் அதிகமாக வளர்ந்திருக்கும். முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையதாகும். விதைகள், மலர்கள், இலைகள், வேர் போன்றவை மருத்துவ குணம் கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: போர்னியால், கற்பூரம், சிட்ரால், சிட்ரோனெல்லால், யூகலிப்டால், ஷொக்சனால், சைக்லோஹெக்சோன், யூஜினால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்தால், ஓசிமின், தைலம், மலர்கள், இலைகளில் இருந்து கிடைக்கும் டெரியேக்டியால். ஐசோகுவார் செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. மருந்தாகும் தாவரம்: மணமிக்க இலைகள் கக்குவான் இருமலுக்கு பயன்படும். சாற்றினை மூக்கினுள் செலுத்த சளி கட்டுப்படும். படர்தாமரை நோயை குணப்படுத்தும். தேனுடன் கலந்து சூடாக்கப்பட்ட சாறு சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும். மலர்கள் அஜீரணத்தைப் போக்கும், சிறுநீர்க் கடுப்பை, நீக்கும். வேரானது காய்ச்சலை தணிக்கும், குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும். கிருமி நாசினி: பூச்சிகள...
விளாம்பழம்
- Get link
- X
- Other Apps
பல்வேறு வியாதிகளுக்கு அருமருந்தாகும் விளாம்பழம்! உடல் வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் சிறந்ததாகும். விளாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக், ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன. எலும்புகளை பலப்படுத்தும்: விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது. ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகர...
எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்!
- Get link
- X
- Other Apps
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மர...
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்
- Get link
- X
- Other Apps
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் வரக்கொத்தமல்லி --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
கருவளையத்தைப் போக்கும் அகத்தி!
- Get link
- X
- Other Apps
கருவளையத்தைப் போக்கும் அகத்தி! சமையலறை என்பது சமைப்பதற்கான அறை மட்டுமல்ல, உங்களை அழகாக்கும் மந்திர அறையும் அதுதான். வெயில், புகை, தூசு என தினம் தினம் உங்கள் முகத்தைப் பதம்பார்க்கும் விஷயங்கள் ஏராளம். அவற்றில் இருந்து தப்பித்து உங்களது சருமத்தை மாசு, மருவில்லாமல் ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறைக்குள்ளேயே ஒளிந்திருக்கின்றன. அழகோடு ஆரோக்கியமும் தரும் அந்தப் பொருட்களைப் பற்றிச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அருண் சின்னையா. முகத்தின் த ன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு சருமத்துக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரிதான் பராமரிப்பும் இருக்க வேண்டும். ஒரு சருமத்துக்கு ஒத்துக்கொள்வது இன்னொரு வகை சருமத்துக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். வறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் ம...
கோவைக்காய்!
- Get link
- X
- Other Apps
வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்! புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடியினத்தை சேர்ந்தது இந்தியாவில் எங்கும் கிடைக்கும். கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொ ருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். நீரிழிவை கட்டுப்படுத்தும் கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணம...
இரத்த சோகையை குணப்படுத்தும் பீர்க்கங்காய்!
- Get link
- X
- Other Apps
இரத்த சோகையை குணப்படுத்தும் பீர்க்கங்காய்! பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது. பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோ ரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத...
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
- Get link
- X
- Other Apps
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். சர்க்கரை வள்ளிக் கிழங்கின் தாவரவியல் பெயர் இபோமோயா பட்டடாஸ். இந்த கிழங்கு நிஜத்தில் தாவரத்தின் வேர்ப் பகுதியாகும். இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகை. சிவப்பு, சாம்பல், வெள்ளை, கருஞ்சிவப்பு என பல வண்ணங்களில் விளைகிறது. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வ ள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும். மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறு...
தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
- Get link
- X
- Other Apps
தாய்மார்களுக்கு பூண்டு அவசியம் குழந்தை பெற்ற ெபண்கள் தினமும் சத்தான அதே சமயம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும். குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதால் பால் சுரப்பதற்கு உதவும் உணவுகளையும் அதிகமாக உண்ண வேண்டும். எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொரும ல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு. சுறா போன்ற மீன்களுடன் அதிகமாக பூண்டை போட்டு புட்டு செய்து பிள்ளை பெற்றவர்களுக்குத் தருவார்கள். இதுவும் பால் சுரப்பதற்கு உதவி செய்யும். தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. இதனால்தான் பிள்ளை பெற்ற பெண்களுக்கு தலைக்கு ஊற்றும் போது நல்லெண்ணையைக் காய்ச்சி அதில் பூண்டு போட்டு அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்கின்றனர். பூண்டிற்கு ...
பழையபுளி மருத்துவ பயன்கள்
- Get link
- X
- Other Apps
பழையபுளி மருத்துவ பயன்கள் :- +++++++++++++++++++++++++++ புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள். வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும். தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான். மருத்துவ பயன்கள் : * புதிய புளியை பயன்படுத்துவதைவிட பழைய புளியே நல்லது. ‘கோடம்புளி‘ எனப்படும் புளியம்பழம் மிகவும் சிறந்தது. குடல் புண்ணை உண்டாக்காது. * புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும். * புளியிலை ஒரு பங்கு, வேப்பிலை ஒரு பங்கு எடுத்து நன்றாக இடித்து, 8 பங்கு நீர்விட்டு காய்ச்சி 4 பங்காக வற்றியதும் வடிகட்டி, அதைக்கொண்டு புண்களை கழுவிவர ஆறாத ரணங்கள் ஆறிவிடும். * புளியிலையை அவித்து, அதே சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு, வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும். * இளம் பச்சை நிறத்தில் இருக்கும் புளியங்கொழுந்து இலைகளை பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட உடலுக்கு பலம் உண்டாகும்...
கொத்தமல்லிக்கீரையின் மருத்துவக் குணங்கள்:-
- Get link
- X
- Other Apps
கொத்தமல்லிக்கீரையின் மருத்துவக் குணங்கள்:- கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது. இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும். இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும். கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும். பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.